முக கவசம் போடலைன்னா துாக்கிடுவேன்! எச்சரிக்கிறார் 'எமதர்மன்'

முககவசம் அணிவதன் அவசியத்தை, ‘எமதர்மன்’ விளக்குவது போன்ற பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முக கவசம் போடலைன்னா துாக்கிடுவேன்! எச்சரிக்கிறார் எமதர்மன்
X

முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேனர்.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பூலோகம் சென்று வரும் எமதர்ம ராஜன், சித்ரகுப்தரிடம், 'அங்கு எல்லோரும் ஒரு வகை கவசம் அணிந்து இருப்பதால் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. ஆதலால், முகத்தில் கவசம் அணியாதோர் சிலரை தான் இங்கு என்னால் கொண்டு வர முடிந்தது' என்பது போன்ற வாசகம் தாங்கிய 'பேனர்' அச்சிடப்பட்டு, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சில ஆட்டோக்களிலும் அந்த வாசகம் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதே நேரம், இது விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சிலர் கூறுகையில்,''முக கவசம் அணிந்தால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் எனக்கூறுகிறார்கள்; ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தினமும் மணிக்கணக்கில் முக கவசம் அணிந்து நாம் விடும் சுவாசக்காற்றை மீண்டும் நாமே உள்வாங்கிக் கொள்கிறோமே. இதனால், உடலுக்கு உபாதை எதுவும் வருமா என, மருத்துவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றனர்.

Updated On: 15 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

 1. வேளச்சேரி
  அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு இன்று காலை டெல்லி சென்றது
 2. ஒட்டன்சத்திரம்
  திண்டுக்கல்: புகை மண்டலத்தால் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அவதி
 3. மயிலாடுதுறை
  செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை
 4. சோளிங்கர்
  கோவிட் டெஸ்ட்: அலட்சியம் காட்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனை
 5. நாமக்கல்
  சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம் செய்ய...
 6. சினிமா
  விஜய் சேதுபதி, அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தும் யதார்த்த...
 7. பரமத்தி-வேலூர்
  பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
 8. திருநெல்வேலி
  எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: நெல்லை மாவட்ட அதிமுகவினர் மரியாதை
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் குடியிருப்புகளை விட உயரமான சாலை: தலைமைச் செயலாளர்...
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்