/* */

ஆண்டுக்கு, 60,000 கோடி வர்த்தகம்: தொழில் துறையினர் பெருமிதம்

திருப்பூர், வருமான வரித்துறை சார்பில், 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி, திருமுருகன்பூண்டியில் உள்ள ஓட்டலில் நடந்தது.

HIGHLIGHTS

ஆண்டுக்கு, 60,000 கோடி வர்த்தகம்: தொழில் துறையினர் பெருமிதம்
X

வருமான வரித்துறை சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி விருது வழங்கப்பட்டது.

திருப்பூர், வருமான வரித்துறை சார்பில், 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி, திருமுருகன்பூண்டியில் உள்ள ஓட்டலில் நடந்தது. திருப்பூர், வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் சீனிவாசன், வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வருமான வரித்துறை (கோவை) முதன்மை ஆணையர் எம்.பூபால் ரெட்டி பேசுகையில்,''தற்போதைய சூழலில், வருமான வரி செயல்பாடுகள் வெளிப்படையாகவும், வரி செலுத்தும் நடைமுறை எளிமையாகவும் உள்ளது. தொழில் முனைவோர் சரியான முறையில், வருமான வரி செலுத்த முன்வர வேண்டும். தொழில்துறையினர் வரி செலுத்துவதில், ஆடிட்டர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது,' என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம் பேசுகையில், 'திருப்பூரில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. வரி செலுத்துவதில், திருப்பூர் தொழில் முனைவோர் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர். நேற்று தொழிலாளி, இன்று முதலாளி என்பது போல், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையில் தொழிலாளியாக வருபவர்கள், தொழிலதிபர்களாக உருவெடுக்கின்றனர். மிகச்சிறிய அளவில் முதலீடு செய்து, பெரியளவில் முன்னேறுகின்றனர்,' என்றார்.

வரி செலுத்துவதில் முன்னிலையில் உள்ள, கார்ப்பரேட் நிறுவனங்களான பெஸ்ட் கார்ப்பேரஷன் லிட்., ஜெ.ஜி., ஒசைரி பி., லிட்., ஜெய் ஜெய் மில்ஸ் (இ) லிட், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களான, எனெஸ் டெக்ஸ்டைல் மில்ஸ், தி சென்னை சில்க்ஸ், பூமக்ஸ் கிளாத்திங் ஆகிய நிறுவனத்தினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தனி நபர்களில், ஜெகதீசன் ராஜூ, நாச்சிமுத்து சந்திரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ஆர்.வேலுசாமி, எஸ்.ஆர்.ஆறுசாமி, சீனியர் ஆடிட்டர்கள் எஸ்.சுப்ரமணியம், அப்புசாமி, விட்டல்ராஜன், ஏ.லோகநாதன், விளையாட்டில் சிறந்து விளங்கும் ரவி சங்கர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

திருப்பூர் தமிழ் சங்க தலைவர் டாக்டர் ஏ.முருகநாதன், 'வனத்துக்குள் திருப்பூர்' நிர்வாக அறங்காவலர் சிவராமன், பல்லடம், 'வனம் இந்தியா பவுண்டேஷன்' நிர்வாக அறங்காவலர் ஸ்கை வி.சுந்தர்ராஜ், வீரபாண்டி, சாயகழிவுநீர் பொது சுத்திகரிப்பு மைய நிர்வாக இயக்குனர் பி.காந்திராஜன் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

பின், கல்லுாரி மாணவ, மாணவியர் இடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவியரின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடிட்டர் பாலாஜி, மிருதங்கம் இசைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், திருப்பூர் வருமான வரித்துறை இணை ஆணையர் பி.பச்சியப்பன் நன்றி கூறினார்.

Updated On: 10 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...