/* */

நான்கே நாட்களில் 9 அடி உயர்ந்த அமராவதி அணை நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி

Tirupur News,Tirupur News Today-மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அமராவதி அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

HIGHLIGHTS

நான்கே நாட்களில் 9 அடி உயர்ந்த அமராவதி அணை நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி
X

Tirupur News,Tirupur News Today-அமராவதி அணை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அமராவதி அணைக்கு தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அணையின் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 23-ம் தேதி 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 57.25 அடியாக அதிகரித்து நான்கு நாளில் 9 அடி உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் சமவெளிப்பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து இதமான சீதோஷண நிலை நிலவுகிறது. வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் அடி 57.25 உயரத்திற்கு தண்ணீர் உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இப்படி, நான்கே நாட்களில் தண்ணீர் மட்டும் 9 அடி உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இன்னும், வரும் நாட்களில் இதே போல் ‘கிடுகிடு’ என நீர்மட்டம் உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Updated On: 27 July 2023 6:01 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...