/* */

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 33 பேர் டாக்டராக வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு, டாக்டர் படிப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 33 பேர் டாக்டராக வாய்ப்பு
X

திருப்பூரில், அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு டாக்டர் படிப்பில் சேர வாய்ப்பு

சிறுவயதில், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் 'நீ படித்து டாக்டர் ஆகிறாயா?, இன்ஜினியர் ஆகிறாயா?' என, வகுப்பு ஆசிரியர்கள் கேட்பதுண்டு. பெரும்பாலான குழந்தைகள், 'டாக்டர் ஆவேன்' என்றுதான் கூறுவர். ஏனெனில், டாக்டர் படிப்பு என்பது, சமுதாயத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, உடல் நலமற்ற ஒருவரை குணப்படுத்துவதும், உயிரை சிகிச்சை அளித்து காப்பாற்றுவதும் மிக மிக உன்னதமானது. டாக்டரை தெய்வதுக்கு ஒப்பாக கூறுவதும் உண்டு. ஆனால், ஒரு காலத்தில், டாக்டர் கனவு, பலருக்கு கனவான நிலையில், இன்று கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் அது நனவாகி வருகிறது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு டாக்டர் படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 20-ம் தேதி தொடங்கியது. சென்னையில் நடந்த இந்த கலந்தாய்வில், அரசு பள்ளி ஒதுக்கீட்டில் 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 166 பேருக்கு அழைப்பு வந்தது. 84 பேர் முதல்நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 7 மாணவிகள் விரும்பிய கல்லூரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி, கே.எம்.சி.எச்.மருத்துவ கல்லூரி, ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி, சென்னை ராஜா முத்தையா கல்லூரி, தூத்துக்குடி, கடலூர் பல் மருத்துவ கல்லூரி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, அரியலூர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க மாணவ-மாணவிகள் தேர்வானார்கள்.

கணபதிபாளையம் பள்ளியில் 3 பேர், உடுமலை பெண்கள் பள்ளியில் 3 பேர், அய்யன்காளிபாளையம் பள்ளியில் 2 பேர், பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியில் 2 பேர், கணக்கம்பாளையம் பள்ளியில் 2 பேர் வீதம் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் 18 பேர், பல் மருத்துவ படிப்பில் 15 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 5 பேர் மருத்துவ கவுன்சிலிங்கில் தேர்வாகி இருக்கிறார்கள். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. நமது மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களிடையே மருத்துவ படிப்பில் சேருவதற்கான முனைப்பு அதிகரித்துள்ளது' என்றார்.

ஆண்டுதோறும், திருப்பூரில் அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Oct 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...