/* */

வேளாண் சட்டத் திருத்தம் எதிராக திருப்பூரில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 18 வது நாளாக போராடி வருகின்ற சூழ்நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் , மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஈடுபட முயன்றனர்.

ஆனால், காவல்துறை வைத்திருந்த தடுப்புகளையும் மீறி உள்ளே செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் திருப்பூர் டவுன்ஹால் மைதானம் அருகே உள்ள பாலத்தின் இரு சாலைகளையும் அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலமாக வந்த மனிதநேய மக்கள் கட்சியினர் ஏர்கலப்பை, மண்சட்டி உள்ளிட்ட விவசாய உபகரணங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்தனர்.

Updated On: 14 Dec 2020 12:03 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்