/* */

எமனாக மாறிய செல்பி மோகம்.

வாணியம்பாடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை தவறுதலாக இயக்கிய இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு,

HIGHLIGHTS

எமனாக மாறிய செல்பி மோகம்.
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சஞ்சீவி (வயது 18) அவரது உறவினரான சௌந்தராஜன் உடன் அதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தில் ஏர் உழுது கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது உணவு அருந்துவதற்காக டிராக்டர் ஓட்டுநரான சௌந்தர்ராஜன் வீட்டிற்கு சென்றபோது, சஞ்சீவி தான் தற்போது டிராக்டரை இயக்குவதாக செல்போனில் செல்பி எடுத்து தனது ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு டிராக்டரை இயக்கியுள்ளார்.

அப்போது தவறுதலாக இயக்கியதால் டிராக்டர் உடன் அருகில் இருந்த சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்து நீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினரும் மற்றும் அம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்க போராடினர்.

சடலத்தை மீட்க முடியாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து சுமார் 4 மின் மோட்டார்களை கொண்டு வந்து கிணற்றில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் கிரேன் உதவியுடன் 4 மணி நேரத்திற்குப் பிறகு டிராக்டர் மற்றும் சஞ்சீவியின் உடலை மீட்டனர் பின்னர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைசியாக செல்போனில் செல்பி எடுத்து, தனது ஸ்டேட்டஸில் வைத்த இளைஞர் உயிரிழந்ததில் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Updated On: 14 May 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்