நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

வாணியம்பாடி அருகே நெற்பயிர் அறுவடை செய்து கொண்டிருந்த போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததால் பெண்கள் அலறி அடித்து ஓட்டம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்
X

வயலில் புகுந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்த இளைஞர் சதிஷ்குமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் கிராமத்தில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் அறுவடை செய்யும் பணியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் நீண்ட நேரம் ஆகியும் வராததால், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் என்பவர் பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டார்.

விவசாய நிலத்தில் மலைப்பாம்பு புகுந்தது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

Updated On: 25 Nov 2021 9:25 AM GMT

Related News