/* */

வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு  முகாமை தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் தடுப்பூசி  முகாமை தொடங்கி வைத்தார்
X

வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு  முகாமை தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரசந்தை பகுதியில் உள்ள நகரபுற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமைமில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தடுப்பூசி போட்டுக் கொண்டு தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி தொகுதியில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தடுப்பூசி இல்லாத நிலையில் இன்று தடுப்பூசி வந்ததால் போடும் பணிகள் தொடங்கப்பட்டது. வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் அருகில் உள்ள அரசு நகர்புற சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் முகாமில் கலந்துகொண்ட வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பிரிவினரில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தார். இதில் அவர் தனது குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

மேலும் அவருடன் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பலரும் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி டாக்டர் தேன்மொழி ஆகியோர் இருந்தனர் தொடர்ந்து வாணியம்பாடி தொகுதியில் 1500 பேருக்கு தடுப்பூசிகள் இன்று ஒரே நாளில் போடப்பட்டது.

Updated On: 12 Jun 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?