/* */

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 33,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்

ஆலங்காயம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 33,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்தார்

HIGHLIGHTS

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில்  33,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்
X

பிரியதர்ஷினி ஞானவேலன்

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 13 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. இவற்றில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

வி.சி.க வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் திருப்பத்தூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய 8-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகலா மாதனூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய 2-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 'கை' சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

மற்ற வார்டு 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்களே நேரடியாகக் களமிறக்கப்பட்டனர். அ.தி.மு.க கூட்டணி ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியைக்கூட கைப்பற்றவில்லை.

இதில் ஆலங்காயம் ஒன்றியத்தை உள்ளடக்கிய 3வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பிரியதர்ஷினி ஞானவேலன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

பிரியதர்ஷினி ஞானவேலன் பெற்ற மொத்த வாக்குகள் 33,844. அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் வளர்மதி அசோகன் 5,458 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவரைக் காட்டிலும் 28,386 வாக்குகளை கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பிரியதர்ஷினி ஞானவேலன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகன்யா 2,666 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், தே.மு.தி.க வேட்பாளர் தனலட்சுமி 1,338 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

பிரியதர்ஷினி ஞானவேலன். இவரின் கணவர் ஞானவேலன் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளராக தி.மு.க-வில் பொறுப்பு வகிக்கிறார்.

Updated On: 14 Oct 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!