/* */

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு
X

தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம், ஆதியூர் ஊராட்சி, இராவுத்தம்பட்டி கிராமம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி எத்தனை நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது குறித்தும் கேட்டறிந்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் பொதுமக்கள் அறியும்படி எடுத்துகூற வேணடும். ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உங்கள் ஊராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் எத்தனை நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள் என்ற விபரங்களை தயார் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேணடும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக கொரோனா தடுப்பூசிகளை பொது மக்களுக்கு வீடுவீடாக சென்று செலுத்தப்பட்டு வருகிறது. இக்கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் 100 சதவிகிதம் பொது மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் செவலியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் உதவி ஆணையர் (கலால்) பானு, வட்டாட்சியர் சிவபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை ஆனந்தகுமார், சிவகுமார், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Oct 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்