/* */

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன்

ஜோலார்பேட்டையில் பரோலில் இருந்த பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

HIGHLIGHTS

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன்
X

பலத்த போலிஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு அவருடைய தாயார் அற்புதம்மாள் சிறையில் புறநானூற்று அதிகமாக உள்ளதாகவும் மேலும் அவருக்கு சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் நிலையை காரணம் காட்டி முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்

இந்த நிலையில் கடந்த மே மாதம் 28 தேதியில் முதல் தற்போது வரை பேரறிவாளன் 10 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வீட்டிலேயே தங்கியிருந்தார் மேலும் தமிழக முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் இதன் காரணமாக 31 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் பிணை ஜாமீன் வழங்கப்பட்டது.

பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் இன்று பரோலை ரத்து செய்ய வேலூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்

அதனைத் தொடர்ந்து புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பின் பேரறிவாளன் பிணை ஜாமினில் வெளியே வருவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றனர்.

Updated On: 11 March 2022 2:15 PM GMT

Related News