/* */

பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்

HIGHLIGHTS

பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
X

சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோவிந்தசாமி ரெட்டி தெருவில் வசித்து வரும் குயில்தாசன் இவரது மகன் பேரறிவாளன் (வயது 51) இவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியிருந்தார்.

மனுவை பரிசீலித்த முதல்வர் 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 20 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து அவரது வீட்டில் ஜோலார்பேட்டை போலிசார் அதற்கான பதிவேட்டில் கையொப்பம் வாங்கி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர், தருமபுரி, உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்த நிலையில் இதுவரை 8 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்பந்தமாக அவரது வீட்டில் இருந்து வேலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் தனிபிரிவு தலைமை காவலர் திருக்குமரன் மற்றும் போலீசார் 15 க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தி பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 29 Jan 2022 2:31 PM GMT

Related News