Begin typing your search above and press return to search.
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
HIGHLIGHTS

கோழிப்பண்ணையில் சிக்கிய மலைப்பாம்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்தூருகம் பகுதியில் ஆசிரியர் சொக்கநாதன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை ஒன்று உள்ளது.
இந்த கோழிப்பண்ணையில் இன்று திடீரென சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்துள்ளதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூச்சலிட்டு உள்ளன கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து சென்று கிராம மக்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஆம்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் மலைப்பாம்பை வனத்துறையினர் கொண்டுச் சென்று காப்பு காட்டுப்பகுதியில் விட்டனர்..