ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து. 2 பேர் படுகாயம் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
X

கன்டைனர் லாரி மீது மோதி உருக்குலைத்த வேன்

தர்மபுரியில் இருந்து திருத்தணி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 15 பேர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த வேனை பெருமாள் என்பவர் ஓட்டி வந்தார் அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் பயணம் செய்த மணிகண்டன், வெற்றிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் மேலும் 5 பேர் லேசான காயம் ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து ஆம்பூர் கிராமிய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 July 2021 4:11 PM GMT

Related News