குடிபோதையில் வழிமறித்து கொலை செய்த 4 சிறுவர்கள்

ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் குடிபோதையில் இளைஞரை வழிமறித்து குத்தி கொலை செய்த போதை சிறார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குடிபோதையில் வழிமறித்து கொலை செய்த 4 சிறுவர்கள்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சீக்காஜோனை பகுதியை சேர்ந்தவர் திருமலை (22) இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி அர்ச்சனா என்கிற மனைவியும் 9 மாத பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் திருமலை அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு பக்கத்து கிராமமான நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பள்ளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவிற்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த சீக்கஜோனை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (15). சந்தோஷ் குமார் (16) சேட்டு, சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் குடிபோதையில் திருமலையை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென போதை சிறார்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து திருமலையின் கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். அப்போது திருமலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜ்குமார் மற்றும் சந்தோஷ் குமாரை பிடித்து மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர், மேலும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கிராமிய போலீசார் படுகாயமடைந்த ராஜ்குமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் தலைமறைவாக உள்ள சேட்டு சக்திவேல் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 April 2021 4:32 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
 2. தமிழ்நாடு
  பேரறிவாளனை 50000 பேர் சிறையில் சந்தித்தனர்: 'அள்ளி' விட்ட சீமான்
 3. குமாரபாளையம்
  சங்கடஹர சதுர்த்தி: குமாரமங்கலம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணை -அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்
 5. தேனி
  யுடியூப்பில் அவதூறு செய்தி: தேனி எஸ்.பி.யிடம் தி.மு.க. புகார்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு குறைக்க சேதமான கழிப்பிடம்...
 7. விளையாட்டு
  ஐபிஎல் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் மகத்தான சாதனை
 8. குமாரபாளையம்
  அங்கன்வாடி மையத்திற்கு பேன், பாய்கள் வழங்கினார் தி.மு.க. கவுன்சிலர்
 9. ஜெயங்கொண்டம்
  சிறுபாலம் அமைப்பதற்கான பணியினை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்
 10. தேனி
  கடமலைக்குண்டு அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு