ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை. ஆம்பூர் நகர போலீசார் விசாரணை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
X

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் சிதறி கிடக்கும் பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரூக் இவருக்கு 3 ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாரூக் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடிப் படிக்கட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு 2 அறைகளில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 சவரன் தங்க நகை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாரூக்கு மனைவி அர்ஷத் பானு ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Updated On: 22 Aug 2021 6:49 AM GMT

Related News