ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரூ 16 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
X

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட வீடு 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் விஜய் குமார். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இவருடைய மனைவி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவரும் அருகிலுள்ள காலனி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இன்று மாலை விஜயகுமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.16 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து விஜய் குமார் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..

Updated On: 9 Dec 2021 2:01 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 2. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 3. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 4. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
 5. நாமக்கல்
  பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
 6. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்
 7. திருநெல்வேலி
  நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில்...
 8. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (20ம் தேதி) நிலவரம்
 9. செங்கம்
  செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 10. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்