/* */

வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்
X

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஆதனூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தாவரவியல் ஆசிரியராக சஞ்சய் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஆசிரியர் சஞ்சய் மாணவர்களுக்கு ரெக்கார்டு நோட்டை எழுதி வந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து எழுதிய ரெக்கார்டு நோட்டை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் சில மாணவர்கள் ரெக்கார்டை எழுதி முடிக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டை சமர்பிக்காத மாணவர்களை கேள்வி கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை முயன்று தாக்க முயன்றுள்ளனர். அத்துடன் நேராக ஆசிரியரிடம் சென்று அவரை ஆபாசமாக திட்டியதுடன் அவரை தாக்க முயன்ற நிலையில் , ஆசிரியர் அதிர்ச்சி அடைந்ததுடன் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றுள்ளார்.

இதுகுறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார் . அதில் சில மாணவர்கள் தகாத முறையில் ஆசிரியரிடம் நடந்துகொண்டதும் , மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் வரை சென்றுவிட்டது.

இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி உதவி ஆட்சியர் காயத்ரி சுப்ரமணி மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற தலைமையாசிரியரிடம் இது குறித்து விசாரித்தனர். அத்துடன் பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி, தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதுடன், ஆசிரியரை தாக்க முயன்ற மாணவனை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 21 April 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்