/* */

ஆம்பூர் அருகே பாலாற்றில் 6ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பாலாற்றில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே பாலாற்றில்  6ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

சிறுவன் உடலை தேடும் கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்வன்.

கிராமத்துக்கு அருகில் உள்ள விண்ணமங்கலம் ஏரியில் தொடர்ந்து ஒரு வார காலமாக பெய்த கனமழையால் 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி முழு கொள்ளளவை எட்டி அதன் உபரி நீர் வெளியேறுவதை பார்க்க நண்பர்களுடன் சென்றுள்ளான், அப்போது அங்கு பாலாற்றில் அவர்களது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற சர்வன் நீரில் மூழ்கினான்.

இதனைக்கண்ட அங்கிருந்த கிராம மக்கள் சிறுவனை பாலாற்றில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தேடி சடலமாக மீட்டனர். பின்னர் விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Updated On: 27 Aug 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி