ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்: 5 பேர் கைது
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
HIGHLIGHTS

மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட 6 மாட்டு வண்டிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் உள்ள பாலாற்று மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நரியம்பட்டு பாலாற்று பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்களை பிடிக்க முயன்றபோது 6 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோட முயன்றனர்.
இதனையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த காவல்துறையினர், மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த 5 பேரை துரத்திப் பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்ட நரியம்பட்டு பகுதியை சேர்ந்த மாயாசன் (எ)சிவலிங்கம், அன்பரசன் சின்னவரிகம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் வடிவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.