பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய போது நடந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பொங்கல்  விடுமுறை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிய  போது நடந்த வாகன விபத்தில்  8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய போது நடந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த மாணவன் ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள மாதகடப்பா மலை கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார் (22 வயது) இவர் சென்னை சேத்துப்பட்டில் தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் மீண்டும் விடுமுறை முடிந்து இன்று தனது இருசக்கர வாகனத்தில் திலீப் குமார் அவரது உறவினரான 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீகாந்தை (14 வயது) அழைத்துக்கொண்டு சென்னை சென்று கொண்டு இருந்தார்

அப்போது ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது வாகனம் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாணவன் ஸ்ரீகாந்த் தூக்கி வீசப்பட்டு 50 அடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயங்களுடன் திலீப் குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மாணவன் ஸ்ரீகாந்த் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 19 Jan 2022 12:46 PM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள்...
 2. திருநெல்வேலி
  40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
 3. பொன்னேரி
  மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு
 4. தொண்டாமுத்தூர்
  கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
 5. பரமத்தி-வேலூர்
  பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்
 6. நாமக்கல்
  கல்வி நிறுவனவாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
 7. திருவள்ளூர்
  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
 8. இந்தியா
  நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
 9. நாமக்கல்
  நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை
 10. பொன்னேரி
  திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம்