Begin typing your search above and press return to search.
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
HIGHLIGHTS

நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை, உமர்ரோடு அதனை ஒட்டி உள்ள சாலைகளில் அதிகளவில் ஆக்கிரமிப்பால் கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்குவதால் இருபுறமும் கால்வாய்களை தூர்வாரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்