/* */

ஆம்பூரில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்; கொள்ளைபோன 2 கார்கள் மீட்பு

ஆம்பூரில் 40 கிலோ கஞ்சா மற்றும் கொள்ளை போன 2 கார்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்; கொள்ளைபோன 2 கார்கள் மீட்பு
X

கஞ்சா பதுக்கி வைத்திருத்தாக கைதுசெய்யப்பட்ட ஜெகன் குமார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மற்றும் கோடியூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் கோடியூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் ஆம்பூர் ஏ கஸ்பா ரேணுகாம்பாள் தெருவை சேர்ந்தவர் ஜெகன் குமார்(25) என்றும், அவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் ஜெகன் குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 2 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், அவர் எம்.பி.ஏ பட்டபடிப்பு முடித்தவர் என்றும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

காவல்துறையினர் பிடியிலிருந்து தப்பிக்க அவர் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியும், போலீஸ் என்று போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டும் சுமார் ஒரு வருட காலமாக வளம் வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கடந்த மாதம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ரவிகுமார் என்பவருக்கு சொந்தமான 2 கார்களை ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து திருடிச் சென்று திருப்பத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து, திருப்பத்தூர் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6.50 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, கார் திருட்டு வழக்கு உள்ளிட்ட 2 வழக்குகளில் பட்டதாரி இளைஞர் ஜெகன் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Aug 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?