Begin typing your search above and press return to search.
கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நா.த.க போராட்டம்
ஆம்பூரில் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்
HIGHLIGHTS

கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவடடம் ஆம்பூர் நகராட்சிகுட்பட்ட தார்வழி பன்னீர்செல்வம்நகர், பிலால்நகர்,இருளர் காலணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் தொடர் கனிமவள கொள்லையில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்