மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு: கிராம மக்கள் அச்சம்

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால்  கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு: கிராம மக்கள் அச்சம்
X

நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படும் கிராமம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பல்லி, விநாயகபுரம், ரங்காபுரம், ரால்லகொத்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில நேற்று இரவு சுமார் 8.10 மணிக்கு 2 வது முறையாக மீண்டும் அதிக சத்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் அத்திமாகுலப்பல்லியில் உள்ள ராமர்கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ஓம் சக்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகத் தெரிவிக்கின்றனர்

இதனால் அவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் நின்றதாகவும் மீண்டும் நில அதிர்வு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தங்களது வீடுகளுக்குள் செல்லாமல் தெருக்களிலேயே தங்கியிருந்ததாக தெரிவித்தனர்.விடிந்தும் கூட மக்கள் தங்களது வீடுகளுக்குள் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்

ஒரே பகுதியில் 2-வது முறையாக தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு எந்த ஒரு பாதிப்பும் அத்திமாகுலபல்லி பகுதியில் ஏற்படவில்லை, நில அதிர்வும் பதிவாகவில்லை என்பது தெரிகிறது. அப்பகுதி மக்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்தனர் இதனால் அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்ய போவதாக தெரிவித்துள்ளனர்

Updated On: 5 Dec 2021 5:00 PM GMT

Related News