சுயேச்சையிடம் தோல்வியை தழுவிய திமுக

மாதனூர் ஒன்றியம் 20வது ஒன்றிய உறுப்பினர் தேர்தல் நேரடிப்போட்டியில், சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சுயேச்சையிடம் தோல்வியை தழுவிய திமுக
X

திமுக வேட்பாளரை தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் மனோரஞ்சிதம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், திமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றியது. அதிமுக குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திமுக தோல்வியை சந்தித்த சில இடங்கள் கூட அதிமுகவிடம் தான் தோற்றது.

ஆனால், திமுகவின் வெற்றிக்கு திருஷ்டியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் 20வது ஒன்றிய உறுப்பினர் தேர்தல் அமைந்தது. இங்கு திமுக சார்பில் கல்பனா என்பவர் போட்டியிட்டார், அவரை எதிர்த்து மனோரஞ்சிதம் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால், இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது,மொத்தமுள்ள 23 வார்டுகளில் திமுக 18 ஒன்றிய உறுப்பினர்களை பெற்றது. அதிமுக 4 இடங்களை பெற்றது. ஆனால், 20வது வார்டில் திமுக வேட்பாளர் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இந்த வார்டில் மனோரஞ்சிதம் பெற்ற வாக்குகள் 2108. கல்பனா பெற்ற வாக்குகள் 2101. வெறும் ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வியை தழுவியது.

தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக, இந்த ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையிடம் தோற்றது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது.

Updated On: 2021-10-14T19:02:36+05:30

Related News

Latest News

 1. இந்தியா
  சாதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்திய ஏவுகணை..!
 2. நீலகிரி
  பார்வை குறைபாடு என்பது குணப்படுத்தக் கூடியது தான்: வெங்கய்யா நாயுடு...
 3. வணிகம்
  ரிசர்வ் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு
 4. சினிமா
  வெளிநாட்டுப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்...
 5. வணிகம்
  எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: அரசுக்கு ரூ.21,000 கோடி வருமானம்
 6. தமிழ்நாடு
  என்னாச்சு நித்திக்கு? சாப்பிட முடியலையாம், தூக்கம் வரலையாம்
 7. தமிழ்நாடு
  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்வு
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் ஆண்டு விழா
 9. தமிழ்நாடு
  பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்
 10. ஆவடி
  ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த நபர் கைது