Begin typing your search above and press return to search.
தொடர் கனமழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழை காரணமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், தரை பாலங்கள் நீரில் மூழ்கின
HIGHLIGHTS

தடையை மீறி தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் வாகனங்கள்
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திர நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கிளை ஆறுகளான மலட்டாறு ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு தரைப்பாலம் வழியாக போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்ட நிலையில் தடையை மீறி தனியார் பேருந்து மற்றும் வாகனங்கள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர்.
ஆம்பூர் அருகே உள்ள பொண்ணப்பள்ளி, அபிகிரிபட்டரை, அரங்கள்தூருகம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் முற்றிலுமாக மூழ்கி உள்ளது அதுமட்டுமில்லாமல் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு நெற்பயிர்கள் கேழ்வரகு வேர்க்கடலை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது