Begin typing your search above and press return to search.
ஆம்பூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றையானை
ஆம்பூர் அருகே விவசாய நிலத்திற்குள் ஒற்றையானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை
HIGHLIGHTS




திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பொண்ணப்பல்லி கிராமத்தில் சமைய்யா என்பவருக்கு சொந்தமான சுமார் 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பச்சை மிளகாய் தோட்டம் மற்றும் விஜயன் என்பவருக்கு சொந்தமான கேழ்வரகு தோட்டம் உள்ளது.
நேற்றிரவு வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று விளைநிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.