ஆம்பூரில் சாலையில் வெள்ளமென ஓடும் கழிவு நீர்: பொதுமக்கள் அவதி

ஆம்பூர் அருகே கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அவதி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூரில் சாலையில் வெள்ளமென ஓடும் கழிவு நீர்: பொதுமக்கள் அவதி
X

ஆம்பூரில் சாலையில் வெள்ளமென ஓடும் கழிவு நீர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ரெட்டி தோப்பு பெத்லேகேம் பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் சரிவர கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்ததால் கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி உள்ளதால் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதால் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வாரியாக நகராட்சி நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 2 Aug 2021 12:17 PM GMT

Related News