மாதனூர் ஒன்றிய குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி

மாதனூர் ஒன்றியத்தில் 17 வாக்குகள் பெற்று திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாதனூர் ஒன்றிய குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
X

மாதனூர் ஒன்றிய  ஒன்றிய தலைவராக சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்றது 12 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 20 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து இன்று ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் மாதனூர் ஒன்றியத்தில் 17 வாக்குகள் பெற்று திமுக மாதனூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். ஒன்றிய தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

இதில் வேலூர் மேற்கு மாவட்ட அவை தலைவர் ஆனந்தன், வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Updated On: 22 Oct 2021 5:18 PM GMT

Related News