அதிமுக கள்ள நோட்டு, திமுக நல்ல நோட்டு: எம்பி கதிர் ஆனந்த் பேச்சு

அதிமுக ஒரு கள்ள நோட்டு திமுக தான் நல்ல நோட்டு. எனவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று எம்பி கதிர் ஆனந்த் பேச்சு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அதிமுக கள்ள நோட்டு, திமுக நல்ல நோட்டு: எம்பி கதிர் ஆனந்த் பேச்சு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வில்வநாதனை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்பி கதிர் ஆனந்த், யார் வந்தாலும் திட்டங்கள் நிறைவேறும் திட்டங்களை யார் நிறைவேற்றி கொடுப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய காலம் இது. எத்தனையோ திட்டங்களை ஸ்டாலின் அறிவிக்கிறார். அதிமுக அரசு செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நல்ல கலர் ஜெராக்ஸ் மிஷின் ஒன்று வாங்கி வைத்துள்ளார்கள். ஸ்டாலின் அவர்கள் சொன்னவுடன் பின்னாடி சென்று கலர் ஜெராக்ஸ் எடுத்து விடுகிறார்கள்.

அதிமுக திட்டத்திற்கும், திமுக திட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்று என்னை கேட்டார்கள். நான் ஒன்று தான் சொன்னேன், எங்களுடையது நல்ல நோட்டு அது கள்ள நோட்டு என்று சொன்னேன். கள்ள நோட்டு என்றைக்குமே செல்லுபடியாகாது நல்ல நோட்டு மட்டும்தான் செல்லுபடியாகும்

எத்தனை முறை 500 ரூபாய் 2000 ரூபாய் ஜெராக்ஸ் எடுத்து போட்டாலும், கள்ள நோட்டு கள்ள நோட்டு தான். நல்ல நோட்டு நல்ல நோட்டு தான் மக்களுக்கு பயன் அடைய வேண்டிய திட்டங்களைக் கொண்டு செல்லும் கட்சி என்றால் அது திமுக கூட்டணி தான்.

நான் அதிகமாக கடவுள் நம்பிக்கை உடையவன். நான் விழுந்து வணங்குவது என் பெற்றோர்களை மட்டும்தான். எனக்கு என்ன வேண்டுமானாலும் என் தாய் தந்தையர் காலில் விழுந்து நான் கேட்கிறேன். இங்கு இருக்கக்கூடிய சகோதரர்கள் சகோதரிகளே கழக தோழர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். உன் பாதங்களை தொட்டு கேட்கிறேன். உங்கள் வாக்கை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார்

இதில் மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 21 March 2021 11:05 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு