Begin typing your search above and press return to search.
வாணியம்பாடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததானம் முகாம்
வாணியம்பாடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது
HIGHLIGHTS

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய இரத்த தான முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வாணியம்பாடி கிளை ஆகியோர் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.
முகாமை மாவட்ட பொருளாளர் யூனுஸ் துவக்கி வைத்தார். கிளை நிர்வாகிகள் முஜீத், நியாமத், ஷேக் அலி மற்றும் தொண்டரணியினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 7 பெண்கள் உட்பட 36 நபர்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அம்பிகா சண்முகம் மற்றும் மருத்துவர் தன்வீர் அஹமத் ஆகியோர் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.