Begin typing your search above and press return to search.
ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும்படை பறிமுதல் செய்து நடவடிக்கை
HIGHLIGHTS

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேசிய நெடுஞ்சாலை கன்னிகாபுரம் பகுதியில் காசிம்மாள் என்பவர் வீட்டில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சம்பத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தபோது ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த 70 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவுக்கு தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்துவது தொடர்கதையாகி வருகிறது