/* */

துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது.

கள்ளத்துப்பாக்கி வைத்து களவணித்தனம் செய்த இளைஞர்.

HIGHLIGHTS

துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது.
X

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி ( கோப்புபடம்)

ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியை வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது செய்யப்ட்டார்.அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் மான் கொம்புகள் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பி கொல்லை பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதன்பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் திருமால் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கம்பி கொல்லை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இளைஞர் ஒருவர் காவல்துறையினரை பார்த்து தப்பி ஓடியுள்ளார் அவரை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே உள்ள பலாமருத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்றும் இவர் அங்கிருந்து திருமணம் செய்துகொண்டு ஆம்பூரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

பின்னர் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 மான்கொம்புகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 20 May 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?