/* */

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
X

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு இளைஞர்களுக்கு வேலை வாய்பு வழங்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களும், இளம்பெண்களும் இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களி்ல் நல்ல வேலையில் இருந்து வருகிறார்கள். இந்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு கல்வி உதவிகள் செய்யப்படுகின்றன.குறிப்பாக கல்வி கட்டணத்தில் சலுகை, மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவச சைக்கிள், லேப்டாப், இலவச சீருடைகள், இலவச வரைபட கருவிகள், இலவச அரசு பஸ் பாஸ் வசதி, படித்து முடித்த அனைவருக்கும் இலவச டூல்கிட் என்று பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதனால் மாணவ, மாணவிகள் மத்தியில் பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர எப்போதும் கடும்போட்டி நிலவும். இந்த பயிற்சி நிலையம் பேட்டையில் நகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. இந்த நேரத்திலும் இங்கு வந்து செல்ல நல்ல போக்குவரத்து வசதி உள்ளது. அதனால் இந்த பயிற்சி நிலையத்திற்கு எளிதாக மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வந்து செல்லலாம். இங்கு அரசு சார்பில் அவ்வப்போது பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவது உண்டு.திருநெல்வேலி மாவட்டத்தில் இது ஒரு முக்கியமான பயிற்சி நிலையம் ஆகும்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10.10-2022 அன்று, காலை 10.00 மணி முதல் 4.00 வரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தகவல்.

மேற்காணும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில், ஐ.டி.ஐ . பயின்று தேர்ச்சிப்பெற்ற பயிற்சியாளர்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10ம், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04622-342432 , 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Oct 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்