நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல்

நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமல்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல்
X

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற.உள்ளது.

இரண்டாம் கட்டமாக அக்டோபர் 9ஆம் தேதி களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதை முன்னிட்டு நேற்று மாலை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த கூடாது. அரசு வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On: 14 Sep 2021 4:53 AM GMT

Related News