/* */

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம்
X

திருநெல்வேலி மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சி கூட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்வது குறித்தும், ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கான பணிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோய்யை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தான் ஒழிக்க முடியும். எனவே தாங்கள் ஊராட்சியில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

மேலும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சிமன்ற தலைவராக தோந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள்ளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர்) எம்.சுகன்யா, பயிற்சி ஆட்சியர் மகாலெட்சுமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்.

Updated On: 28 Oct 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?