/* */

நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தனியார் நிறுவனத்திற்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி சாலையில் சகதியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
X

வண்ணாரப்பேட்டை அருகே சிமென்ட் ஏற்றி வந்த லாரி சகதியில் சிக்கி நடுரோட்டில் நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே தனியார் நிறுவனத்துக்கு சிமென்ட் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து தச்சநல்லூர் வழியாக மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் தனியார் சிமெண்ட் கலவை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இந்நிறுவனத்துக்கு சிமென்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று காலை மதுரை நெடுஞ்சாலையில் திருப்ப முயன்ற போது சாலையோரம் கிடந்த சகதியில் லாரியின் நடுபக்க சக்கரம் சிக்கிக் கொண்டது. இதனால் லாரி பழுதாகி நடுரோட்டில் அப்படியே நின்றது. இதன் காரணமாக நெல்லை டூ மதுரை நெடுஞ்சாலை பகுதியில் இன்று சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தச்சநல்லூர் வழியாக திருநெல்வேலி நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் நெல்லை நகர் பகுதியில் இருந்து வண்ணாரப்பேட்டை வழியாக தச்சநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு லாரியின் சக்கரம் சகதியிலிருந்து எடுத்து விடப்பட்ட பிறகே பழுதாகி நின்ற லாரி சாலையில் இருந்த அப்புறப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீராகியதால் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து சென்றன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 1 Dec 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்