நெல்லையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ள 200 அடி விளம்பர பேனரால் பரபரப்பு

2 ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து நாளை நமதே நாற்பதும் நமதே என்று ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ள 200 அடி விளம்பர பேனரால் பரபரப்பு
X

திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் வைத்த 200 அடி நீள பேனர் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது

நாளை நமது நாற்பதும் நமதே, தமிழகத்தின் சூழ்நிலை எப்போது மாற, தலைவா தலைமை ஏற்க வா என்று நெல்லையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ள விளம்பர பேனரால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகாந்துக்கு பிறகு யாரும் அரசியலில் ஜொலிக்கவில்லை. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு முழுக்கு போட்ட நிலையில், நடிகர் விஜய் அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதேசமயம் நடிகர் விஜய்யின் குடும்பத்தில் அரசியல் பிரவேசம் தொடர்பாக தந்தை, மகன் பிரச்சினை நீடித்து வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊராக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் பெயரை பயன்படுத்தியே ரசிகர்கள் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்வதால் ரசிகர்களின் அரசியல் ஆர்வத்திற்கு விஜய் பச்சைக் கொடி காட்டியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய் உடனடியாக அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அவரது ரசிகர்கள் விளம்பர பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நெல்லை மாநகர விஜய் மக்கள் இயக்கத்தினர் நெல்லை சந்திப்பு பகுதியில் இன்று வைத்துள்ள பேனரில் ஏழைகள் இங்கு ஏழையாகவே வாழ பணக்காரர்கள் அங்கே வசதியாக வாழ தமிழ்நாட்டின் சூழல் எப்போது மாற ? , தலைவா தலைமை ஏற்க வா, உனக்காக காத்திருக்கிறோம் என்று எழுதப்பட்ட வசனத்துடன் சுமார் 200 அடி நீளம் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை நமதே நாற்பதும் நமதே, எவர் உண்டு இவனை வெல்ல, எல்லோரும் தேர்தலில் நின்று ஜெயிச்சுட்டு தான் சர்க்கார் அமைப்பாங்க நாங்கள் சர்க்கார் அமைச்சிட்டு தான் தேர்தலில் நிற்கிறோம் என்று அனல் பறக்கும் வசனங்களுடன் தெறிக்க விட்டுள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதை குறிவைத்து நாளும் நமதே நாற்பதும் நமதே என்று ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசையை தூண்டும் வகையில் பேனர் வைத்துள்ளனர். மேலும் இந்த பேனரில் நடிகர் விஜய் படத்துக்கு பின்னால் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தை முகப்பு பக்கத்தை அச்சடித்துள்ளனர். நாளை நெல்லையில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ள இந்த பேனரால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 Oct 2021 6:15 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே...
 2. திருவொற்றியூர்
  சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு...
 3. திருவொற்றியூர்
  அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
 4. ஜெயங்கொண்டம்
  வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
 5. திருவொற்றியூர்
  பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ்...
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று
 7. இந்தியா
  போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
 9. செஞ்சி
  செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை