/* */

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி : தளவாய் சுந்தரம் கணிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெறும் என்று, அக்கட்சி அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி : தளவாய் சுந்தரம் கணிப்பு
X

அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

இது தொடர்பாக, அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும், அதிமுக வெற்றி பெறும். திமுக ஆட்சியின் குறைகளை எடுத்துச் சொல்லி, வெற்றி பெறுவோம்.
கூட்டுறவு சங்க நகைக்கடன் பெற்று அதில் முறைகேடு நடந்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் நெல்லையில் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் வாங்கியதில் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவர்னரிடம் கோப்பு நிலுவையில் இருக்கும் போதே, சட்டவிதி 162 பயன்படுத்தி 7.5 சதவீத மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கொண்டு வந்துள்ளார். இது போன்ற நடவடிக்கை எடுக்க வேறு எந்த தமிழக முதலமைச்சரும் செய்தது கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்.

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமிபாண்டியன் கூறுகையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவால் பயன்பெற்ற ஒரு குடும்பத்தின் (சசிகலா) துரோகத்தால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்றார். நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உடனிருந்தார்.

Updated On: 24 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?