/* */

நெல்லையில் பணியாளர் தேர்வாணைய தேர்வு வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

பணியாளர் தேர்வாணைய தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

நெல்லையில் பணியாளர் தேர்வாணைய தேர்வு வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.
X

பணியாளர் தேர்வாணைய தேர்வு Paper-II (Descriptive paper) of Multi Tasking (Non- Technical) Tier-ஈ திருநெல்வேலி மாவட்டத்தில் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ள்ளது

மேற்படி தேர்வானது திருநெல்வேலி மாவட்டத்தில் மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரகுமத்நகர் பாளையங்கோட்டை. தேர்வு மையத்தில் வைத்து நடைபெறுகின்றது. இந்த தேர்வினை 163 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு நடைபெறும் மையத்தின் அருகாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தயார் நிலையில் வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் வர இருப்பதால் தேர்வு மையங்களில் "கொரோனா" பரவலை தடுக்கும் பொருட்டு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்திடவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவும் வேண்டும்.

மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது

Updated On: 28 April 2022 4:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்