/* */

சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய படங்கள் நூறு கோடி ரூபாய் மற்றும் அதையும் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனல் தயாரிப்பாளர்கள் இவருடைய கால்ஷீட்டுக்காக காத்து கிடக்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான டாக்டர், டான் போன்ற இவருடைய படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை குவிந்தன. தற்போது இவர் டைரக்டர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த 'பிரின்ஸ்' படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயார் ஆகிவருகிறது. சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனல் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருவது சிறப்பு. அவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் என்று பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் 'பிரின்ஸ்' படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் எப்போது வெளியாகும் என்று தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஆவலோடு காத்து இருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் படம் வெளியாகும் தேதி பற்றியும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். படக்குழுவினர் இதனை ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளதனர். இதற்கிடையே தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு அக்டோபர் 21ந்தேதியே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்கு எப்போதும் ரசிகர்கள் பெரிய அளவில் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதால் இந்த அறிவிப்பால் தியேட்டர் அதிபர்களும் மிகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகார்த்தியேனை போன்று விஜய் சேதுபதியையும் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வருகிறார். புது முக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இந்த படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனராக இருந்தார். இந்த இப்படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்..இந்த படம் எப்போது வெளியாகிறது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் சினிமா தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். விஜய் சேதுபதி படம் என்றாலே மற்ற நடிகள்கள் படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். அவர் படத்தை ரசிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் விரும்பி பார்ப்பது உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் பட வெளியாகும் அறிவிப்பால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Updated On: 6 Oct 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?