/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக சார்பில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்

ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்ககளை அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக சார்பில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்
X

பைல் படம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 6-10-2020, 9-10-2020 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டம் வாரியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன், மேலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, கழக வழிகாட்டு குழு உறுப்பினரும், கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளருமான கோ.பாலகிருஷ்ணன் முன்னாள் எம்பி., கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி. ராஜேந்திரன் முன்னாள் எம்எல்ஏ., ஆகியோர் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Updated On: 13 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு