கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்

கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் ரூ.50,000/- நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்
X

கொரோனா நோய்த்தொற்று பாதித்து இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் உரிய சான்றுகள் சமர்பித்து நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தகவல்.

கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் ரூ.50,000/- நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிதொகை பெற இந்நாள்வரையிலும் 697 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேற்படி விண்ணப்பங்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏற்கனவே சுகாதார துறையினரால் கோவிட் தொற்றினால் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட நபர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது 49 நபர்களின் முகவரி முழுமையாக இல்லாததாலும், 50 நபர்களின் வாரிசுகள் வாரிசுசான்று / இறப்பு சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்காத காரணத்தினாலும் இழப்பீடு வழங்கிட இயலவில்லை. அவர்களின் விவரங்கள் திருநெல்வேலி மாவட்ட இணையதளம் முகவரியான https://tirunelveli.nic.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தகுதியானவர்கள் கொரோனா பரிசோதனை, சிகிச்சை ஆவணங்கள், இறப்பு மற்றும் வாரிசு சான்றுகள் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்து மேற்குறிப்பிட்ட நிதியுதவியினை பெற்று கொள்ளலாம்.

இதுவரையிலும் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்காதவர்கள் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ (What's New) பகுதியில் "Ex-Gratia for Covid-19" என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் (Online) மூலம் முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து உதவித்தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jan 2022 3:25 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே...
 2. திருவொற்றியூர்
  சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு...
 3. திருவொற்றியூர்
  அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
 4. ஜெயங்கொண்டம்
  வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
 5. திருவொற்றியூர்
  பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ்...
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று
 7. இந்தியா
  போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
 9. செஞ்சி
  செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை