/* */

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் நட்டனர்.

HIGHLIGHTS

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
X

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உதவி எந்திரவியல் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் நட்டனர்

உலகம் முழுவதும் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்க ரயில் பாதைகளையும் மின் மயமாக்குவது, ரயில் பெட்டிகளில் பயோ கழிவறைகள் அமைப்பது, பிளாஸ்டிக் பாட்டில்கள் அரவை இயந்திரங்கள் நிறுவுவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (05.6.2021) அன்று கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில்வேக்கு சொந்தமான உபரி நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை இரயில்வே காலனி பகுதியில் இன்று 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகானி, முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் ஏ.பி. திருநாக செந்தில்குமார், கோட்ட சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மேலாளர் மகேஷ் கட்காரி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

மதுரை ரயில் நிலைய கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில் பகுதியில் இருபது மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மதுரை ரயில் நிலைய இயக்குனர் மற்றும் கோட்ட வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ், முதுநிலை ரயில் இயக்க மேலாளர் மது, உதவி சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

இதுபோல உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி ஆகிய ரயில் நிலைகளிலும் நடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உதவி எந்திரவியல் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் நட்டனர். இதேபோல தூத்துக்குடி, தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. பணிமனையில் வீணான மூலப்பொருட்களைக் கொண்டு செங்குத்து தோட்டமும் அமைக்கப்பட்டது.

Updated On: 5 Jun 2021 3:10 PM GMT

Related News