திருநெல்வேலியில் பாஜக சார்பில் ஜான் பொன்னையா உருவபொம்மை எரிக்க முயற்சி

ஜான் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருநெல்வேலியில் பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் வேல்.ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருநெல்வேலியில் பாஜக சார்பில் ஜான் பொன்னையா உருவபொம்மை எரிக்க முயற்சி
X

திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் பாஜக இளைஞரணியினர் ஜான் பொன்னையா உருவபொம்மை எரிக்க முயற்சி காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.M.R.காந்தி மற்றும் பாரத மாதா பூமா தேவி ஆகியோரை பற்றி மிகவும் கீழ்த்தரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்துவ பாதிரியார் ஜான் பொன்னையா என்பவர் பேசியுள்ளார்.

இதனை கண்டித்தும் ஜான் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் திருநெல்வேலி டவுண் சந்திப்பிள்ளையார் கோவில் அருகே பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் வேல்.ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஜான்பொன்னையா உருவ பொம்மை எரிக்க முயன்ற போது பாஜக வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர் S.V.குருசாமி, திருநெல்வேலி மேற்கு மண்டல தலைவர் மாரியப்பன், திருநெல்வேலி நகர் கிழக்கு மண்டல பொது செயலாளர்கள் S.M.சங்கர்,செல்வ பிரியா முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2021 1:06 PM GMT

Related News