/* */

திரு இருதய ஆலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை

உடையார்பட்டி திருஇருதய ஆலயத்தில் பேராலய பங்குத்தந்தை மிக்கேல்ராசு புத்தாண்டு ஆசி வழங்கி திருப்பலி நிகழ்த்தினார்

HIGHLIGHTS

திரு இருதய ஆலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை
X

நெல்லை உடையார் பட்டியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்

நெல்லையில் 2022 புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடையார்பட்டி திரு இருதய ஆலயம், பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாடுமுழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நெல்லை உடையார் பட்டியில் உள்ள திரு இருதய ஆலயம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர் அருட்திரு.அந்தோணி சாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி மற்றும் புத்தாண்டு செய்திகளை வழங்கினார்.

அதேபோல் திரு இருதய ஆலயத்தில் திருஇருதய பேராலய பங்குத்தந்தை மிக்கேல் ராசு புத்தாண்டு நற்செய்திகளை வழங்கினார். இதுபோன்று கத்தீட்ரல் பேராலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்கள் மற்றும் நெல்லை மாநகர வீதிகள் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. வீதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகரம் முழுதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 31 Dec 2021 8:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!