கல்குவாரி விபத்தில் உரிமையாளர் கைது: நெல்லை ஆட்சியர் பரபரப்பு பேட்டி

கல்குவாரி சட்டத்துக்குப் புறம்பாக குவாரி இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கல்குவாரி விபத்தில் உரிமையாளர் கைது: நெல்லை ஆட்சியர் பரபரப்பு பேட்டி
X

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை கல்குவாரி விபத்தில் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பாறைகள் சரிந்து வருவதால் மீதமுள்ள 4 பேர் மீட்பதில் சிக்கல். குவாரி உரிமையாளர்கள் கைது. சட்டத்துக்குப் புறம்பாக குவாரி இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு பேட்டி.

நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் வெங்கடேஷ்வரா என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த கல் குவாரியில் நாள்தோறும் வெடி மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்றிரவு 300 அடி ஆழம் கொண்ட குவாரிக்கு அடியில் கற்களை அள்ளும் பணியில் லாரி டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மேலே இருந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால் கற்களின் இடிபாடுகளுக்குள் 6 பேரும் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆறு பேரில் முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மிதமுள்ள நான்கு பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று இந்த நிலையில், குவாரியை சுற்றியுள்ள பாறைகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால் கூடுதலாக வீரர்களை களமிறக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டிஜஜி ஆகிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்திய கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டு ஐஎன்எஸ் பருந்து என்ற ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டது. ஆனால் சிக்கலான பகுதி என்பதால் தங்களால் முடியாது என ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பி விட்டனர். தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொன்னாகுடி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குவாரி குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்தபோது காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான குவாரி என்பதும் அதே சமயம் ஆவணப்படி சங்கரநாராயணன் என்பவரின் பெயரில் தான் இந்த குவாரிக்கு லைசென்ஸ் இயங்கி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சங்கர நாராயணனை கைது செய்தனர். இதற்கிடையில் காரில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக குவாரியில் கற்கள் அள்ளுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது-, அதிகாலை 12.30 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் ஆறு நபர்கள் மாட்டி கொண்டனர். நிலச்சரிவு காரணமாகவே விபத்து ஏற்பட்டது. காவல்துறை, தீயணைப்புத்துறை இணைந்து இரண்டு நபர்கள் மீட்கபட்டுள்ளனர். மீதி நான்கு பேரை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. கப்பற்படை ஹெலிகாப்டர் மூலம் முயற்சி எடுத்தோம். 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால் மீட்பு பணியில் சிரமம் உள்ளது. மருத்துவ குழுவினரும் உள்ளனர். வல்லூநர்களிடமும் ஆலோசனை பெற்று வருகிறோம். லைசென்ஸ் உரிமதாரர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையான உரிமையாளர் குறித்து விசாரித்து வருகிறோம். கடந்த ஏழு மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள 6 குவாரிகளை மூடியுள்ளோம். இது ஒரு தேசிய பேரிடர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது 2018ல் இருந்து இயங்கி கொண்டிருக்கிறது. அனுமதி அளித்த அளவை விட கூடுதலாக தோண்டப்பட்டுள்ளதா என விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Updated On: 15 May 2022 7:44 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
 2. இந்தியா
  ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
 3. தமிழ்நாடு
  இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
 4. தர்மபுரி
  ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
 5. ஈரோடு மாநகரம்
  சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
 6. ஈரோடு மாநகரம்
  கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
 7. விளையாட்டு
  Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
 8. சங்கரன்கோவில்
  கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...
 9. ஈரோடு
  பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.,23) நீர்மட்ட நிலவரம்
 10. இந்தியா
  2024 குடியரசு தின விழா: ஜோ பைடனுக்கு அழைப்பு