/* */

நெல்லையப்பர் கோவில் யானைக்கு புதிய செருப்பு: பக்தர்களால் நன்கொடை

Nellaiappar Temple - நெல்லையப்பர் திருக்கோவில் காந்திமதி யானைக்கு இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.12000 மதிப்பில் புதிய செருப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவில் யானைக்கு புதிய செருப்பு: பக்தர்களால் நன்கொடை
X

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்புகள் பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Nellaiappar Temple -தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்ற யானை உள்ளது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானையின் உடல் நன்மைக்காக மருத்துவர்களின் பரிந்துரை பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை நடை பயணம் மேற்கொள்ளும், இதன் காரணமாக யானையின் உடல் எடை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக சாலைகளில் யானை செல்லும் போது மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்புகளை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.12000 மதிப்பில் பிரத்யேகமாக யானை காந்திமதிக்காக தயாரிக்கப்பட்ட இந்த செருப்புகளை கோவில் அதிகாரிகளிடம் பக்தர்கள் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனையின் படி யானைக்கு செருப்பு அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்க உள்ள நிலையில் தினமும் சுவாமி ரதவீதியில் உலா வரும்போது யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். அப்போது மிடுக்கான அலங்காரத்துடன் காலில் வெள்ளி சலங்கை கட்டி யானையை காந்திமதி ரத வீதிகளில் வலம் வரும்.

இந்த ஆண்டு புதிய வரவான செருப்பு அணிந்து புதிய தோற்றத்தில் யானை வலம் வர இருப்பதை காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருக்க பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக நடக்க வைப்பதை போன்று யானையையும் குழந்தையாக பாவித்து பாசத்துடன் கோவில் நிர்வாகம் மற்றும் நெல்லையப்பர் கோவில் பக்தர்கள் பராமரித்து வருவது அனைவரிடத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  3. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  4. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  5. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  6. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  8. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  9. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  10. ஈரோடு
    சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்.18) ஜாதி முல்லை கிலோ ரூ.500க்கு...