/* */

நெல்லையில் பாலியல் தீண்டாமை விழிப்புணர்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகளுடனான பாலியல் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

HIGHLIGHTS

நெல்லையில் பாலியல் தீண்டாமை விழிப்புணர்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் பாலியல் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக மாணவ- மாணவிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான இலவச புகார் தெரிவிக்கும் எண்கள் அடங்கிய பதாகைகளை காட்சி படுத்த வேண்டும். விரைவில் பாலியல் தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வுகளை காவல் துறையினரை ஓரங்கிணைந்து கட்டாயம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300 பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகளுடனான பாலியல் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது:-

பள்ளி மாணவ- மாணவிகள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த தகவல்களை உரிய நபரிடம் எவ்வாறு தெரிவிப்பது, போக்சோ சட்டம் ஆகியவை குறித்து மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கல்வி கூடங்களை அதிகம் கொண்ட தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளிடம் பாலியல் தீண்டாமை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பது அதற்கு தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை கொண்டு வரவேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் சந்தித்து வரும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் பள்ளியில் முகப்பு பகுதி, வகுப்பறை, கழிப்பறை, கலையரங்கம் மற்றும் மாணவ- மாணவிகள் கூடும் இடங்கள் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உடனடியாக பாலியல் குற்றங்களை தொடர்பான புகார்களை தெரிவிக்கவும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் அரசு அறிவித்த இலவச உதவி எண்கள் அடங்கிய பதாகைகளை காட்சிபடுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் கிராம பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், காவல்துறையினர் அடங்கிய கிராம குழுக்களை விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாலியல் தீண்டாமை குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ- மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், காவல்துறையினர் மற்றும் மனநல மருத்துவர்களை ஒருங்கிணைந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் கட்டாயம் நடத்த வேண்டும். மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக புகார்கள் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மூலம் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களிலிருந்து வரும் மாணவ-மாணவிகளிடம் குழந்தை திருமணங்கள் தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்தி இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, சமூக நலத்துறை அலுவலர் சரஸ்வதி, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 2:41 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு